மைதானத்தில் நடந்த சம்பவம் - ரோகித் சர்மா திடீரென மருத்துவமனையில் அனுமதி

 
rohit rohit

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்யும் போது அவரது உள்ளங்கையில் பந்து வேகமாக பட்டதால் அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வங்கதேச அணி போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து வங்கதேச அணி முதலாவதாக பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணி ஃபீல்டிங் செய்தது. 

ind

இப்போட்டியில் சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை அனமுல் தூக்கி அடித்த நிலையில், பந்து அவுட் சைட் எட்ஜ் ஆகி, ஸ்லிப் திசையில் ரோஹித்தை நோக்கி சென்றது. இதனை சற்றும் எதிர்பாராத ரோஹித் ஷர்மா, பந்தை பிடிக்க குத்துமதிப்பாக கையை நீட்டியபோது, பந்து கைவிலில் பட்டு கீழே விழுந்தது. ரோஹித் ஷர்மா உடனே வலியால் துடித்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா பெவிலியனுக்கு சென்ற நிலையில், உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அறிக்கை வந்த பின்னரே காயம் குறித்து தெரியவரும் என்பதால் இன்றைய போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. ரோகித் சர்மாவுக்கு பதிலாக சபாஷ் அகமது மாற்று வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.