உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம்..

 
அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா

பர்மிங்காமில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா

உலக வில்வித்தை போட்டிகள், சுவிட்சர்லாந்து நாட்டு லவ்சேனி நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அதில் 140 உறுப்பு-நாடுகள் உள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துத் தன் குழுவில் இணைத்துக்கொண்டுள்ளது. நடப்பாண்டுக்கான   உலக கோப்பை வில்வித்தை போட்டி பர்மிங்காம்   நகரில் நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு  ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம்  வெண்கலம் வென்று அசத்தியிருக்கிறது.

அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா

இந்த ஜோடி ஏற்கனவே கடந்த மாதம் பாரீஸில் நடைபெற்ற  வில்வித்தை உலக கோப்பை போட்டியில்  தங்கம் வென்று  அசத்தியிருந்தது.  துல்லியமாக அம்புகளை எய்து புள்ளிகளை சேர்த்த இந்த ஜோடி 152-149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.  உலக கோப்பை வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த அணி  வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறது.