சிக்ஸர் அடிப்பதே எனது பலம்...பலரால் அது முடியாது - இஷான் கிஷான் பேட்டி

 
ishan kishan

சிக்ஸர் அடிப்பதே எனது பலம் எனவும், நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதை செய்ய முடியாது என இஷான் கிஷான் கூறியுள்ளார். 

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கேசவ் மகராஜ் முதலில் பேட்டிங்கை செய்தார். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களை எடுத்தது. 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சுப்மன் கில்,ஷிகர் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்த ஆட்டம் இருந்து வெளியேறினர். அடுத்து வந்த இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சிறப்பாக அடி இந்திய அணி வெற்றி நோக்கி நகர்த்தியது. தொடர்ந்து அசத்திய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. சதத்தை நெருங்கிய இசான் கிசன் துர்திஷ்டவசமாக 93 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து இந்திய அணி வெற்றி உறுதி செய்தார். 45.5 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 2823 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ishan kishan

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷான் கூறியதாவது:   சில வீரர்களுக்கு ஸ்டிரைக்கை சுழற்றும் பலம் உண்டு, சிக்ஸர் அடிப்பதே எனது பலம். நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதைச் செய்ய முடியாது. சிக்ஸர் அடித்து ரன்கள் குவித்தால், ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதாக இருந்தால் அதை செய்யுங்கள். ஒற்றை ரன்னாக எடுத்திருக்கலாம், சதம் அடித்திருக்கலாம்.  ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன். எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்தால், எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறேன். சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் 93 ரன் அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அடுத்து வரும் வீரர்கள் மீது அழுத்தம் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்