அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரரான கிரண் பொல்லார்டுக்கு இன்று பிறாந்தநாள்

 
pollard birthday

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிரண் பொல்லார்டு இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பொல்லார்டுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளன. குறிப்பாக இந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. ஐபிஎல் தொடரில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது முரட்டு தணமாக பேட்டிங், சாதூர்யமான பந்துவீச்சு, நகைச்சுவையான் செய்கை உள்ளிட்டவை ரசிகர்களை இவரது பக்கம் கவர்ந்திழுக்க செய்தது. ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை படைத்தவர் பொல்லார்டு. 


35 வயதான பொலார்ட் 2007 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அவர் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை இந்தியாவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி கொல்கத்தாவில் விளையாடினார். 123 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட் 2706 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 3 சதங்கள் 13 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 119 ஆகும். இதேபோல் 101 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்டு 1569 ரன்களை எடுத்துள்ளார். இதேபோல் பந்துவீச்சிலும் கைதேர்ந்தவர் பொல்லார்டு. ஒருநாள் போட்டிகளில்  55 விக்கெட்டுகளையும்,  டி20 போட்டிகளில் 42 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் பொல்லார்ட். கடந்த மாத இறுதியில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் பொல்லார்டு இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி பொல்லார்டுக்கு விளையாட்டு வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது டுவிட்டர் பக்கத்தில் பொல்லார்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.