இந்திய அணியுடன் எம்.எஸ்.தோனி திடீர் சந்திப்பு - ஏன் தெரியுமா?

 
MS Dhoni

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக ராஞ்சி சென்றுள்ள இந்திய அணியை முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அடுத்ததாக டி20 தொடரில் விளையாடவுள்ளது.  முதல் டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு நடக்கிறது.   ஒருநாள் தொடரில் இடம்பெற்ற கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஒருநாள் தொடரில் ஆடிய ஒரு சில வீரர்கள் மட்டுமே 20 ஓவர் அணியில் இடம்பெற்று உள்ளனர்.  ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரை மோசமாக இழந்த நியூசிலாந்து அணி அதற்கு 20 ஓவர் தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. நியூசிலாந்து 20 ஓவர் அணிக்கு சான்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில், ராஞ்சி சென்றுள்ள இந்திய அணியை முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  ராஞ்சியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.