தென் ஆப்ரிக்கா தொடர் - பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்ப்பு

 
Siraj

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் இரவு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணியில் தேர்வாகி இருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் அவர் முதல் டி20 போட்டியில் விளையாடவில்லை.

jasprit bumrah

இந்நிலையில் அவரது காயம் குணமாக 5 முதல் 6 வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் தென் ஆப்ரிக்கா தொடர் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் டி20 உலக கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை. மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசிஐ தீவிரம் காட்டி வரும் நிலையில்,  இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.