டி20 உலக கோப்பை - நமீபியா அணி 121 ரன்கள் குவிப்பு

 
Nam vs Ned

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5வது தகுதி சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 121 ரன்கள் குவித்துள்ளது. 

8-வது டி 20 உலக கோப்பை தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டி நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 அணிகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 4 தகுதி சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

NED

இந்நிலையில், இன்று 5வது தகுதி சுற்று போட்டி நடைபெற்று. இதில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் செய்த நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜான் ஃப்ரைலிங் 43 ரன்கள் எடுத்தார்.