ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்

 
Cummins

ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது. அந்த அணி பலமுறை உலக கோப்பைகளை வென்றுள்ளது. அந்த அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக பணியாற்றி வந்த ஆரோன் பின்ச் தனது மோசமான ஃபார்ம் காரணமாக, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் ஆரோன் பின்ச் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான கேப்டன் யார் என்ற எதிர்ப்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில், பேட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுளளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் தற்போது கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார். வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடர் முதல் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.