செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா... இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு...

 
செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா... இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு...

செசபிள்  மாஸ்டர் சர்வதேச செஸ் தொடரில்  இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா  இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.   

உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட்  (CHESSABLE MASTERS) செஸ் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.  ஆன்லைன் வழியாக நடைபெற்று வரும் இந்த போட்டி, .  நவம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில்  4  சுற்றுகள் நிறைவடைந்து, 5வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் இந்தியா சார்பில், சென்னை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா(16 வயது) பங்கேற்றார்.  உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி  பிரக்ஞானந்தா  அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  

கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா

இதன் மூலம்  அவர் 12 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்று வாய்ப்பில் நீடித்து வந்த பிரக்ஞானந்தா, பின்னர் நெதர்லாந்தைச் சேர்ந்த அனீஷ் கிரி உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் விடாப்பிடியாகப் போராடியதால்  2-2 என்ற செட் கணக்கில் ஆட்டம் டிரா ஆனது. இதனால்  வெற்றியாளரை தீர்மானிக்க  டை பிரேக்கர் போட்டி வைக்கப்பட்டது.  அதில் பிரக்ஞானந்தா 1.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில்  வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்கு  முன்னேறினார். ஃபைனல் ரவுண்டில்  உலகின் 2ம் நிலை வீரரான  டிங் லிரெனுடன்  (சீனா) மோதினார்.  

செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா... இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு...

2 நாட்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் நாளான நேற்று, உலகின் 2 வது நிலை வீரரான  டிங் லிங்கிரனிடம், பிரக்ஞானந்தா  தோல்வி அடைந்தார்.  இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் போட்டியில் வெற்றி பெற்று டை பிரேக்கர்  நிலைக்கு  எடுத்து சென்றார். இறுதியாக டை பிரேக்கர் சுற்றில்  வெற்றி முகத்தில் இருந்தும், ஒரே ஒரு தவறான நகர்த்தலால் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.  இதனால் இந்திய வீரரும் இளம் கிராண்ட்மாஸ்டருமார்  பிரக்ஞானந்தா செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார். இதனிடையே இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பிரக்ஞானந்தாவுக்கு வேலை வ்கழங்கப்பட்டுள்ளது.  பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.