பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறோம் - ரோகித் சர்மா

 
rohit

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி வருகிறோம் என இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

8-வது டி 20 உலக கோப்பை போட்டி இன்று முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி வருகிற 23ம் தேதி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. 

ICC


 
இதனையொட்டி 16 அணிகளின் கேப்டன்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி விடுவோம். அப்போட்டியில் யார் விளையாட போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சூர்யகுமார் யாதவ் சிறந்த நிலையில் உள்ளார். அவர் அந்த பாணியிலேயே பேட்டிங் செய்வார் என்று நம்புகிறேன். அவர் நம்பிக்கை நிறைந்த வீரர். அவர் பயமின்றி விளையாடுகிறார். தனது திறமையை நன்றாக பயன்படுத்துகிறார். சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்காற்றுவார் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை சந்திக்கும்போது எங்களது குடும்பம் மற்றும் அனைவரையும் பற்றி பேசுவோம். நீங்கள் என்ன புதிய கார் வாங்கினீர்கள் என்று கேட்பேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு இருப்பதை நமது முந்தைய தலைமுறை நமக்கு கற்பித்துள்ளது. இவ்வாறு கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.