அமெரிக்க ஓபன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் தோல்வி

 
Serena Williams Serena Williams


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கணையும், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கணையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கணை அஜ்லா டோமலஜனோவி உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் 7க்கு5, 6க்கு7, 6க்கு1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார். ஏற்கனவே அமெரிக்க ஓபன் தொடருடன் ஓய்வு பெறுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் இன்றைய போட்டியுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றது அவரது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.