டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

 
Aus

டி20 உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். 

IRE

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள சூப்பர் 12 குரூப் 1 பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியம் என்பதால் இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.