டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

 
Aus vs SRI

டி20 உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடிய 8 அணிகளில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறின. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரைஇறுதிக்குள் நுழையும். 

australia

இன்று நடைபெறவுள்ள சூப்பர் 12 போட்டியில் குரூப்1-ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.  இலங்கை இலங்கை அணி கடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.