ஐ.பி.எல். இன்றைய போட்டியில் குஜராத்-லக்னோ அணிகள் பலப்பரீட்சை

 
ipl today

ஐபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் 4-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதுவரை 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 4-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமயிலான குஜராஜ் டைட்டன்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று மல்லுக்கட்டும் இரண்டு அணிகளுமே புது அணிகள் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ர்பில் உள்ளனர். 

gt vs lsg

கே.எல். ராகுல் இதற்கு முன்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்துள்ளதால் அவருக்கு கேப்டன் பதவியில் அனுபவம் உள்ளது. இதனால் அவர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை திறம்பட வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ அணியில், கேப்டன் ராகுல், மனிஷ் பாண்டே, குயிண்டன் டீ காக் உள்ளிட்டோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பார்கள். இதேபோல் பந்துவீச்சில் ஆவேஷ்கான், ரவி பிஷ்னாய், குருணல் பாண்டியா உள்ளிட்டோர் வழு சேர்ப்பார்கள். 

gujarat

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கார்த்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கேப்டனாக செயல்படுவது இதுவே முதல்முறை. இதனால் அவர் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. அந்த அணியில் கேப்டன் கார்த்திக் பாண்டியா, டேவிட் மில்லர், மெத்யூ வேட், சுபான் கில் உள்ளிட்டோர் பேட்டிங்கில் பலம் சேர்ப்பார்கள், இதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷித் கான், விஜய் சங்கர் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிப்பார்கள். இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால், வெற்றியுடன் இந்த தொடரை தொடங்க வேண்டும் என இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.