ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை - பிசிசிஐ புகார்

 
BCCI

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ குற்றம் சாட்டியுள்ளது. 

8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நாளை சிட்னியில் நடைபெறவுள்ள போட்டியில் நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது. இதற்காக சிட்னியில் முகாமிட்டுள்ள இந்திய அணி அங்கு பயிற்சி மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில், சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. சிட்னியில் நடந்த பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய அணி வீரர்கள் ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.