முதல் வெற்றி யாருக்கு ? சென்னை - லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை

 
Csk vs lsg

ஐ.பி.எல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை  அணியும் லக்னோ  அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 6 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது லீக் போட்டி மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. 

csk vs lsg

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதற்கு முந்தைய போட்டியில் கொல்கத்தா அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எம்.எஸ். தோனி மட்டுமே நிலைத்து நின்று ஆடிய நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதேபோல் பந்துவீச்சில் பிராவோ சிறப்பாக செயல்பட்டார். விசா பிரச்சனை காரணமாக தாமதமாக இந்தியா வந்த மொயில் அலி தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் அவர் களம் காணவுள்ளார். இது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதேபோல் நம்பிக்கை நட்சத்திரமான ருத்ராஜ் கெய்க்வாட் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

jadeja

இதேபோல் தனது முதலாவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் கே.எல்.ராகுல், டீ காக் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் அந்த அணி தோல்வியை சந்தித்தது. இருந்த போதிலும் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் இந்த போட்டியிலும் ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள் எனா எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் தோல்வியை கண்ட இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டுவார்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.