"நான் சச்சினுக்கும் மேல".. 100வது போட்டியில் களமிறங்கும் "கிங்" கோலி - புது ரெக்கார்ட்!

 
கோலி

கிரிக்கெட்டில் Fabulous 4 என்று ஒரு பதம் குறிப்பிடப்படும். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் டாப் 4 பேட்ஸ்மேன்களை தான் Fab 4 என்பார்கள். அந்த நால்வர்களில் ஒருவர் தான் ரன்மெஷின் விராட் கோலி. ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தான் அந்த இதர மூவர்கள். இந்த நால்வருமே தங்களுடைய சொந்த மண்ணிலும் சரி அயல் நாட்டு மண்ணிலும் சரி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவிப்பவர்கள். அதிலும் குறிப்பாக ஸ்மித்தை தவிர்த்து மற்ற மூவரும் சொந்த மண்ணில் எப்போதுமே கிங்கு தான்.

இந்திய மண்ணில் கோலியின் ஆக்ரோஷத்தையும் ருத்ரதாண்டவத்தையும் சொல்லவே வேண்டாம். ஒருநாள் போட்டிகளில் 43 சதமடித்துள்ளார். அதில் பாதி இந்திய மண்ணில் அடித்தது. மொத்தமாக 258 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளார். 99 போட்டிகள் இந்திய மண்ணில் ஆடியிருக்கிறார். இன்று அவரின் 100ஆவது போட்டி. இதன்மூலம் சொந்த மண்ணில் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 36ஆவது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

virat kohli: 'Fab Four' find the perfect pitch at ICC World Cup | Cricket  News - Times of India

இந்த வரலாற்று பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், கூல் கேப்டன் தோனி ஆகியோருடன் கோலியும் இணைகிறார். அதேபோல சர்வதேச அளவில் சொந்த மண்ணில் 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள எந்தவொரு வீரரும் கோலி அளவுக்கு கோலோச்சியதில்லை. ஆம் சச்சின் கூட இரண்டாம் இடம் தான். 99 போட்டிகளில் 96 இன்னிங்ஸில் அவர் பேட்டிங் ஆடியுள்ளார். மொத்தமாக 5,002 ரன்கள் எடுத்து 59.64% என பேட்டிங் ஆவரேஜ் வைத்திருக்கிறார். 19 சதங்களும் 25 அரைசதங்களும் இதில் அடக்கம். சச்சினோ 96 இன்னிங்ஸில் 13 சதங்களுடன் 4,231 ரன்கள் எடுத்திருக்கிறார். 

Virat Kohli credits Sachin Tendulkar for turnaround after dismal 2014  England tour

5,002 ரன்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் அதாவது 1,247 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அடிக்கப்பட்டது. 21 இன்னிங்ஸ்களில் 5 சதங்களுட்ன் 69.27% பேட்டிங் ஆவரேஜ் வைத்துள்ளார்.  அதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 சதவீதம் (1,197 ரன்கள்) அதாவது, 22 இன்னிங்ஸ்களில் 59.95 பேட்டிங் ஆவரேஜ் வைத்துள்ளார். அனைவரும் சச்சினுடன் கோலியை ஒப்பிடுவார்கள். ஆனால் நான் அதற்கு மேல். எனக்கு தனித்துவம் இருக்கிறது என தன்னுடைய பேட்டால் நிரூபித்து காட்டி வருகிறார். கோலி சதமடித்து பல மாமங்கள் ஆகிவிட்டது. இன்று நடைபெறும் 100ஆவது போட்டியில் அவரின் பேவரைட் அணியான வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சதமடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.