100வது டி20 போட்டியில் களமிறங்கும் விராட் கோலி - நாளைய போட்டியில் சாதிப்பாரா?

 
virat

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இது விராட் கோலிக்கு 100வது டி20 போட்டி ஆக்கும். 

ஆசிய கோப்பை கிரிக்கெட தொடர் இன்று முதல்  செப்டம்பர் 11ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. துபாயில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது.  'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.முதலில் லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறும்.இதில் நான்கு அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். கடைசியில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள், செப். 11ல் நடக்கவுள்ள இறுதி போட்டிக்கு முன்னேறும்.இந்நிலையில், துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதேபோல் நாளை துபாயில் நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

virat babar

இதில், விளையாடும் இந்திய வீரர் விராட் கோலி தனது 100-வது டி20 கிரிக்கெட் போட்டியை விளையாடுகிறார். இதுதவிர்த்து, இந்திய வரலாற்றில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 100-வது போட்டியில் விளையாடும் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி நாளை பெறுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 2008-ம் ஆண்டு விளையாட தொடங்கிய கோலி இதுவரை டி20 99 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  இதுவரை அவர் விளையாடியுள்ள 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3,308 ரன்களை குவித்து உள்ளார். பேட்டிங் சராசரி 50.12 ஆக வைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 30 அரை சதங்களை அடித்துள்ள கோலியின் உச்சபட்ச ஸ்கோர் 94 ஆக உள்ளது.