ஜிம்பாப்பே தொடர் - காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகல்

 
washington sundar

காயம் காரணமாக ஜிம்பாப்பே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் வருகிற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஜிம்பாப்பே அணிக்கு எதிரான இந்திய அணிக்கு முதலாவது ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த முடிவை பிசிசிஐ மாற்றியது. காயத்தில் இருந்து மீண்ட கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துவார் எனவும், ஷிகர் தவான் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், காயத்தால் அவதிப்பட்டு வரும் வாஷிங்டன் சுந்தர் அதிலிருந்து இன்னும் மீளாததால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். 

ind vs wi

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான இந்திய அணியில், கே.எல்.ராகுல்(கேப்டன்), ஷிகர் தவான் ( துணை கேப்டன்) ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சர்தூல் தாகூர், குல்தீப் யாதவ், ஆவேஸ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சஹார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.