டி20 உலக கோப்பை - மேற்கிந்திய தீவுகள் அணி 146 ரன்கள் குவிப்பு

 
WI

டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 146 ரன்கள் குவித்துள்ளது. 

8-வது டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த  16ம் தேதி தொடங்கிய போட்டி நவம்பர் 13-ம் தேதி வரை  நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 அணிகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

இந்நிலையில், குரூப் பி பிரிவில் தகுதி சுற்றுக்கான கடைசி இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இன்று காலை தொடங்கிய தகுதி சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரண்டேன் கிங் 62 ரன்கள் எடுத்தார்.