மகளிர் ஆசிய கோப்பையை வெல்லுமா இந்தியா? - இலங்கையுடன் இன்று மோதல்

 
INDWvsSRIW

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 
 

8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு போட்டிக்கு முன்னேறின.  முதல் அரையிறுதி போட்டியில்  இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

indw

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன. ஆசிய கோப்பை தொடரில் கடைசியாக 2018-ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் மட்டும் இந்திய அணி, வங்காளதேசத்திடம் தோல்வி கண்டது. மற்றபடி இறுதி சுற்றில் இந்தியா தோல்வியே சந்தித்தது கிடையாது. மேலும் லீக் போட்டியில் இலங்கை அணியை எளிதில் வீழ்த்தியது. எனவே இன்றைய  இறுதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி 7-வது முறையாக கோப்பையை வெல்ல இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.