ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-நேபாள அணிகள் இன்று மோதல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 5வது லீக் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் இன்று பிற்கபலில் நடைபெறௌள்ள போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. முதல் பேட்டிங்கில் இந்திய அணி 266 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.