இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்

 
indvsaus

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 05ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெறவுள்ள 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் விளையாடவுள்ளதால், தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முயற்சி செய்யும் ஆகையால், இந்த போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலிய அணி : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.