இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு

 
IND

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.  இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 74 ரன்களும், ருத்ரான் கெய்க்வாட் 71 ரன்களும் எடுத்தனர்.  இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. 

indvsaus

இந்திய அணி : சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி : டேவிட் வார்னர், மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஸ்பென்சர் ஜான்சன் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.