உலக கோப்பை இறுதிப் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு!

 
indvsaus

உலக கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் சரியாக 2 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது. 

INDvsAUS

இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி : டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.