கொரோனா அதிகரிப்பு - ஐபிஎல் வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க பிசிசிஐ அறிவுறுத்தல்

 
BCCI

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களும் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்ற பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 3 ஆயிரம், 4 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்த திங்கள் கிழமை இந்தியாவில் 3823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே நேற்று முன் தினம் ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்தியாவில்  4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நேற்றை விட 20 சதவீதம் அதிகம் ஆகும். மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

csk new

இந்தச் சூழலில் ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும், வீரர்களும் கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கையாக இருக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.  இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறி இருப்பதாவது:- கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம், ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை, கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வீரர்களையும் உதவி ஊழியர்களையும் நாங்கள் வழிநடத்தியுள்ளோம். வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியம். அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். எங்கள் குழு நிலைமையை கண்காணித்து வருகிறது என கூறப்பட்டு உள்ளது.