பாகிஸ்தானுடன் இனி இந்தியா விளையாடாது- பிசிசிஐ
பாகிஸ்தானுடன் இனி இந்தியா விளையாடாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் 26க்கும் மேற்பட்ட இந்தியர்களின் உயிரிழப்புக்குக் காரணமான துயரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுடன் எந்த இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபடாது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெளிவுபடுத்தியுள்ளார். தனிப்பட்ட தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசிசி தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் உடனான ஒரே குழுவில் சேர்க்கக்கூடாது என ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. ஐசிசி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன், இந்தியா நிபந்தனைகளுக்கு உட்பட்டு விளையாடும் என்றும் பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா அறிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி இருதரப்பு தொடர் 2012-2013ல் நடந்தது. இந்தியாவின் சமீபத்திய பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2008 இல் ஆசியக் கோப்பையின் போது நடந்தது. இருப்பினும், 2005-2006 சீசனுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானில் இருதரப்பு கிரிக்கெட்டை விளையாடவில்லை.


