முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பும்ரா நியமனம்!

 
bumrah

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி நவம்பர் 22ம் தேதி முதல், 26ம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர்  06ம் தேதி முதல் 10ம் தேதி வரையும், மூன்றாவது டெஸ்ட் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரையும், 4வது டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரையும், ஐந்தாவது ஜனவரி 03ம் தேதி முதல் 07ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் படுதோல்வி அடைந்துள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய பயணத்தில் வெற்றியை தொடங்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

Rohit Sharma

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவில் உள்ளார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாத நிலையில், முதல் போட்டிக்கு பும்ரா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.