ஐபிஎல் கோப்பை யாருக்கு? கொல்கத்தாவது 193 ரன்கள் இலக்கு

 
ipl

14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ipl

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடி ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க ஆட்டக்காரரான பாப் டு பிளசிஸ் 35 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அடுத்து வந்த மொயின் அலி அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 37 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக ஆடிய பாப் டு பிளசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

ipl

கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல 193 என்ற கடின இலக்கை எட்ட வேண்டும். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் கிட்டத்தட்ட இதே இலக்கை கொல்கத்தா அணி எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.