செஸ் ஒலிம்பியாட் 5வது சுற்று- பிரக்யானந்தா முதல் தோல்வி
44-வது செஸ் ஒலிம்பிட் போட்டியானது தமிழகத்தில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது இதில் இந்தியா சார்பாக ஆறு அணிகள் பங்கேற்கின்றன பொது பிரிவில் மூன்று அணிகளும் மகளிர் பிரிவில் மூன்று அணிகளும் என மொத்தம் 30 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
இன்றைய தினம் ஐந்தாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் சி பிரிவில் தொடர்ந்து 2 முறை தோல்வியை தழுவிய சாஹிதி வர்ஷினிக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டது. முதலில் இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா , ரோமானிய வீரர் போக்டான் டேனியல் உடன் மோதி போட்டியை சமன் செய்தார். அடுத்ததாக இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜராத்தி, ரோமானிய வீரர் கான்ஸ்டெண்டின் லுபுலெஸ்கு என்பவருடன் மோதி போட்டியை சமன் செய்தார். அடுத்ததாக களமிறங்கிய, இந்திய வீரர் அர்ஜூன் எரிகேசி, ரோமானிய வீரர் மிர்சியா எமிலியன் பார்லிகிராஸ் உடன் மோதி வெற்றிப்பெற்றார். அடுத்து களம்கண்ட இந்திய வீரர் எஸ்.எல். நாராயணன் - ரோமானிய வீரர் லாட் கிறிஸ்டியன் ஜியானுடன் மோதி போட்டியை சமன் செய்தார். இதனையடுத்து இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.
ஆடவர் ஓபன் சி பிரிவில், இந்திய வீரர் சூர்யா சேகர் கங்குலி- சிலி வீரர் கிறிஸ்டோபல் ஹென்ரிக்யூஸ் வில்லாக்ரா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. சிலி வீரர் இவான் மோரோவிச் ஃபெர்னாண்டஸ் உடன் மோதிய இந்தியவீரர் எஸ்.பி.சேதுராமன் வெற்றியை சுவைத்தார். விளையாண்டு 2.5 - 1.5 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய போட்டியில் இந்தியா பி அணியுடன் மோதியது. இந்திய வீரர் குகேஷ்- ஸ்பெயின் வீரர் அலெக்சி ஷிரோவ் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனைதொடர்ந்து மோதிய இந்தியவீரர் சரின் நிஹல் - ஸ்பெய்ன் வீரர் டேவிட் ஆண்டன் குய்ஜர் ஆகியோர் போட்டியை சமன் செய்தனர். தொடர்ந்து ஸ்பெயின் வீரர் சாண்டோஸ் லடாசாவுடன் மோதிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். இந்திய வீரர் அதிபன் - ஸ்பெயின் வீரர் இடுரிஸாகா பொனெல்லி இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றியை சுவைத்தது. இந்திய சி அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 5ம் சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் பிரிவில் 3 அணிகளும் தலா 2.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் ஏ பிரிவில், இந்திய வீராங்கனை கொனெரு ஹம்பி - பிரான்ஸ் வீராங்கனை செபாக் மேரி இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. அடுத்து இந்திய வீராங்கனை ஹரிகா துரோணோவள்ளி- பிரான்ஸ் வீராங்கனை சோஃபி மில்லெட் உடன் மோதி போட்டியை சமன் செய்தார். தொடர்ந்து இந்திய வீராங்கனை வைஷாலி பிரான்ஸ் வீராங்கனை அனாஸ்டாசியா சவினா உடன் மோதி போட்டியை சமன் செய்தார். பிரான்ஸ் வீராங்கனை ஆன்ட்ரியா நவ்ரோடெஸ் உடன் களம்கண்ட இந்திய வீராங்கனை தானியா சச்தேவ் வெற்றிபெற்றார். இந்திய பெண்கள் ஏ அணி 2.5-1.5 புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.
நேற்றைய தின ஆட்டத்தில் ஜார்ஜியா அணியானது இந்தியா மகளிர் சி அணியை போட்டியிட்டு 3-1 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய போட்டியிலும் இந்திய மகளிர் அணி பி அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்திய பெண்கள் சி அணியும் பிரேசில் அணியும் 2-2 என்ற புள்ளிகளின்படி போட்டியை சமன் செய்தது.