’முன்னாள் காதலருடன்…’ டேவிட் வார்னர் மனைவியைத் துரத்து சர்ச்சை

 

’முன்னாள் காதலருடன்…’ டேவிட் வார்னர் மனைவியைத் துரத்து சர்ச்சை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர் டேவிட் வார்னர். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன்.

வார்னரின் மனைவி கேண்டிஸ். இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமானவர். இவருக்கும் டேவிட் வார்னருக்கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

’முன்னாள் காதலருடன்…’ டேவிட் வார்னர் மனைவியைத் துரத்து சர்ச்சை

கேண்டிஸ், வார்னரைத் திருமணம் செய்வதற்கு முன், நியூசிலாந்து ரக்பி வீரர் வில்லியம்ஸைக் காதலித்தார். வில்லியம்ஸும் கேண்டிஸூம் கழிவறையில் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சி சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அதை இவர்களுக்குத் தெரியாமல் ஒருவர் எடுத்து வெளியிட்டிருந்தார். வீடியோ வெளியானது நடந்தது வார்னருடன் திருமணத்திற்குப் பிறகு. இதனால் இருவரைச் சுற்றி சர்ச்சைகள் அவ்வப்போது எழுவது வாடிக்கையாகி விட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், தென்னாப்பிரிக்காவோடு ஆஸ்திரேலியா ஆடிய போட்டியில் பந்தைச் சேதப்படுத்தியதாக டேவிட் வார்னர் மீது புகார் அளிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. அதற்கு தன் மீது சுமத்தப்படும் பழியே காரணம் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகினார் கேண்டிஸ் வார்னர்.

’முன்னாள் காதலருடன்…’ டேவிட் வார்னர் மனைவியைத் துரத்து சர்ச்சை

தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேண்டிஸ் வார்னரிடம், உங்கள் வாழ்வில் வருத்தம் கொள்ளத்தக்கக்கூடிய சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ள சொல்லியிருந்தார்கள். அதில், தான் முன்னாள் காதலருடன் நெருக்கமாக இருந்த வீடியோ, தன் வாழ்வில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டதாகக் கூறியிருக்கிறார் கேண்டிஸ் வார்னர்.

’முன்னாள் காதலருடன்…’ டேவிட் வார்னர் மனைவியைத் துரத்து சர்ச்சை

மேலும், ‘இந்த விஷயத்தை எதிர்காலத்தில் எப்படி என் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்வேன்’ என்று கவலையோடு பேசியிருந்தார்.

கேண்டிஸ் வார்னரும் சர்ச்சைகளும் என்றுமே இணைபிரியாதவை போல.