“இனிதான் ஆட்டம் ஆரம்பம்” - சிஎஸ்கே அணியின் இயக்குனர் விஸ்வநாதன்

 
s s

ஐபிஎல் தொடரில் 2010 ஆம் ஆண்டு 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்த அடுத்த போட்டிகளை வென்று கோப்பையை வென்றது சென்னை அணி. அதே போன்று இந்த ஆண்டு வெல்லும் என்கிற நம்பிக்கை உள்ளது என சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஷிவம் தூபே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று ஊக்கத்தொகை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளர் ஆர்.என். பாபா, முன்னாள் ஹாக்கி வீரர்கள் பாஸ்கரன் மற்றும் ரியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்நிகழ்வில் பேசிய சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன், “இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே  இதுவரை சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். சிஎஸ்கே அணி சரியாக விளையாடதது உங்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கலாம். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். 2010 ஆம் ஆண்டு 5  போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்த அடுத்த போட்டிகளை வென்று கோப்பையை வென்றது சென்னை அணி. அதே போன்று இந்த ஆண்டு வெல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட கடுமையாக உழைத்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.