சிராஜ் வீசிய பந்தால் ஏற்பட்ட காயம் - இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் டேவிட் வார்னர்

 
warner

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார்.   

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.  அந்த அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பீட்டர் ஹெண்ட்ஸ்கோம் 72 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டும், அஸ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களத்தில் உள்ளனர். 

ind vs aus

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, சிராஜ் வீசிய பந்தில் வார்னரின் ஹெல்மெட்டை தாக்கியது. மேலும், அவரது தலை மற்றும் கைகளில் பந்து தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.இந்த நிலையில், 2-வது இன்னிங்சில் இருந்து வார்னர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.