ஓய்வை அறிவித்தார் மேக்ஸ்வெல்.. ரசிகர்கள் ஷாக்..!!

 
Glenn Maxwell Announces Retirement From ODIs Glenn Maxwell Announces Retirement From ODIs


ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளௌன் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். 

கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் மேக்ஸ்வெல். இதுவரை  149 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 3,990 ரன்கள் குவித்துள்ளார். 77 வீக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.  2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல்,   வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியவர். 

Glenn Maxwell Announces Retirement From ODIs

மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில், 126 ஸ்ட்ரைக் ரேட்டுகளுடன் மேக்ஸ்வெல் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருந்து வந்த மேக்ஸ்வெல், திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள அவர், அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் கவனம் செலுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  


2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியின் போது இந்தியாவிடம் தோல்வியை அடைந்தபோதே  ஓய்வு பெற வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டதாக மேக்ஸ்வெல் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவர் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.