கோப்பையை இழந்ததற்கான காரணம் இதுதான் - ஹர்திக் பாண்டிய ஓபன் டாக்!

 
Hardick Pandya

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடனான தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு  ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.  இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே  மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அறிவித்த நிலையில்  கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்று நிலை ஏற்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சிக்ஸர் ஆக மாற்றினார் . இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கடைசி பந்தை பவுண்டரியாக்கி வெற்றியை சிஎஸ்கே வசப்படுத்தினார். இதனால்  5 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: நான் சாக்குப்போக்கு கூறும் நபர்களில் ஒருவரல்ல. சென்னை அணி எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது. நாங்கள் பேட்டிங் செய்த விதம் நிச்சயமாக ஆச்சரியமாக இருந்தது. சாய் சுதர்சன் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. நான் அவரை நன்றாக வாழ்த்துகிறேன், அவர் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யப் போகிறார். எங்கள் வீரர்கள் சீசன் முழுவதும் விளையாடிய விதம் உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.தொடர்ந்து போராடினார்கள். பயிற்சி ஊழியர்களுக்கும் ஒரு சிறப்பு குறிப்பு. அவர்கள் அருமையாக இருந்துள்ளனர். நல்லவர்களுக்கு நல்லது நடக்கும் என்று கடந்த ஆண்டு சொன்னேன். நான் சந்தித்த நல்ல மனிதர்களில் தோனியும் ஒருவர். தோனிக்காக மகிழ்ச்சி.