டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்...

 
டி20 உலக கோப்பை

2022 ஆம் ஆண்டுக்கான  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் மாதம் தொடங்குகிறது.  இந்த முறையும் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

 2022 ஆம்  ஆண்டுக்கான  20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஆஸ்திரேலியாவில்  அக்டோபர் 16 ஆம் தேதி டி20  உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது.  அதன்படி மெல்போர்ன், சிட்னி, பிர்ஸ்பேன் , அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட் மற்றும் பெர்த் ஆகிய 7 இடங்களில்  16 சர்வதேச அணிகளுக்கிடையே மொத்தம் 45 போட்டிகள்  நடைபெறுகிறது.

டி 20 உலக கோப்பை

இந்த தொடரில்  சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி  பெற்றுள்ள அணிகளில் முதல் பிரிவில் (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து  அணிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல்  இரண்டாவது பிரிவில் ( குருப் பி)  இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.   

மேலும் அக்டோபர் 14 முதல் முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. அதனைத்தொடர்ந்து  அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பிரதான சுற்று போட்டிகள் நடைபெறுகிறது.  சிட்னியில் நடைபெற உள்ள முதல் போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.  அதேபோல்  இந்தியா இந்த முறையும் பிரதான எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.  இந்தியா - பாகிஸ்தான்  மோதும் முதல் போட்டி மெல்பர்னில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தியா பாகிஸ்தான்

மேலும் இந்தியா  அணி விளையாடும் போட்டிகள் :

இந்தியா vs பாகிஸ்தான், மெல்பர்ன் கிரிக்கெட் மைதானம் – அக்டோபர் 23

இந்தியா vs குரூப் ஏ ரன்னர் அப், சிட்னி கிரிக்கெட் மைதானம் – அக்டோபர் 27

இந்தியா vs தென்னாப்பிரிக்கா, பெர்த் ஸ்டேடியம் – அக்டோபர் 30

இந்தியா vs வங்கதேசம், அடிலெய்டு ஓவல் – நவம்பர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில்ன்  சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு  முன்னேறும். அதன்பின்னர்,  வரும் நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டி20 உலகக் கோப்பைக்கான அரையிறுதி போட்டிகளும் நவம்பர் 13 ஆம் தேதி மெல்பர்னில் இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.