உலக கோப்பை தொடர் இன்று தொடக்கம் - முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதல்

 
world cup

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

13-வது 50 ஓவர் (ஒருநாள்) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.  முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

nz

இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க முனைப்பு காட்டும். இதன் காரணமாக இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.