உலக கோப்பை : இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-இலங்கை மோதல்

 
Aus vs SRI

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 13 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3 வெற்றிகளுடன் இந்திய அணி  புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியும் 3 வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த அணி ரன்ரேட்டில் பின் தங்கியுள்ளதால் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (2 வெற்றி) மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி(2 வெற்றி) 4வது இடத்திலும் உள்ளன.  இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என 5வது இடத்தில் உள்ளது. 

SRI vs IRE

இந்த நிலையில், இன்று 14வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.  பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பயணத்தை தொடங்க முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் இலங்கை அணியும் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் முதல் வெற்றியை பெற தீவிரம் காட்டுவார்கள் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.