உலக கோப்பை - இன்றைய போட்டியில் இந்தியா - வங்கதேசம் மோதல்

 
INDvsBAN

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இது வரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி நியூசிலாந்து அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதில் 3 வெற்றிகளுடன் இந்திய அணி  புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.  தென் ஆப்ரிக்க அணி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 2 வெற்றி, தோல்வியுடன் 4வது இடத்திலும் உள்ளன.  இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, இரண்டில் தோல்வி என 5வது இடத்தில் உள்ளது. 

IND

இந்த நிலையில், இன்று 17வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வங்கதேச அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.