உலக கோப்பை கிரிக்கெட் - இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா - நெதர்லாந்து மோதல்

 
SAvsNED

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3 வெற்றிகளுடன் இந்திய அணி  புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியும் 3 வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த அணி ரன்ரேட்டில் பின் தங்கியுள்ளதால் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (2 வெற்றி) மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி(2 வெற்றி) 4வது இடத்திலும் உள்ளன.  இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, இரண்டில் தோல்வி என 5வது இடத்தில் உள்ளது. 

NED

இந்த நிலையில், இன்று 15வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது. புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறும். ஆகையால் தென் ஆப்ரிக்க அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.