விராட் கோலி 81வது சதம்- ஆஸ்திரேலியாவிற்கு 534 ரன்கள் இலக்கு

 
s

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியானது பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

இதன் பிறகு 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கே.எல் ராகுல் 77 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். படிக்கல் 25 ரன்களிலும்,ஜெய்ஸ்வால் 161 ரன்ளிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் பிறகு விராட் கோலி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார்.134.3 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்களை எடுத்தபோது இந்திய அணி தனது 2வது இன்னிசை முடித்துக் கொள்வதாக செய்வதாக அறிவித்தது. விராட் கோலி 100 ரன்களுடனும்,நிதிஷ் ரெட்டி 38 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்ஸின் 46 ரன்கள் முன்னிலையும் சேர்த்து ஆஸ்திரேலியா அணி 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ச்

தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக முதல் ஓவரிலேயே நாதன் மெக்ஸ்வீனியை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் பும்ரா. அடுத்து வந்த கம்மின்ஸ் 2 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த லபுஷேன் 3 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களை எடுத்துள்ளது.