ஆசியக் கோப்பை டி20 தொடர்- சுப்மன் கில் துணை கேப்டன்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு துபாயில் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

டி20 வடிவில் நடைபெறவுள்ள இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இந்திய அணியின் வீரர்கள்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சிவி, ஜஸ்பிரித் பும்ரா.
ஸ்டாண்ட் பை பட்டியல்:
பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இதில் முக்கியமாக, சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சஞ்சு சாம்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் துவக்க வீரராக ஆடக்கூடும் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயாஷ் ஐயர் அணியில் சேர்க்கப்படாததற்கான கேள்விக்கு, "அவருடைய தவறும் கிடையாது, தேர்வுக்குழுவின் தவறும் கிடையாது; பதிலாக யாரை நீக்க வேண்டும் என்பதே சிக்கல்" என்று அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாததும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமீபத்திய ஐபிஎல் தொடரில் பெங்களூருக்காக கலக்கிய ஜிதேஷ் சர்மா, இந்திய அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களம் இறங்கவில்லை என்றால் விக்கெட் கீப்பர் பொறுப்பு ஜிதேஷ் சர்மாவுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


