4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி - தொடரை கைப்பற்றி அசத்தல்!

 
ind

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோரூட் 122 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜீரோல் 90 ரன்களும் ஜெய்ஸ்வால் 73 ரன்களும் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.  

ind

இந்த நிலையில், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். இதேபோல் சுபன் கில்லும் தனது பங்கிற்கு அரைசதம் விளாச, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்பட்டுத்திய ஜுரோல் 39 ரன்கள் சேர்த்தார். இறுதியாக இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.