கடைசி வரை பரபரப்பு... 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா

 
ind vs ire

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டப்ளின் பகுதியில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கார்த்திக் பாண்டியா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க அட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷான் 3 ரன்களில் அவுட்டாகிய போதும், அடுத்து வந்த தீபக் ஹூடா தொடக்க வீரர் சஞ்சு சாம்சனுடன் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். இந்நிலையில், சஞ்சு சாம்சன் 77 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 15 ரன்களில் வெளியேறிய நிலையில், தீபக் ஹூடா சதம் விளாசினார். அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹர்த்திக் பாண்டியா 13 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.

ind vs ire

இதனையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து அணி அதிரடி காட்டியது. தொடக்கா ஆட்டக்காரர்கள் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 72(5.4ஓவர்) ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 110 ரன்களை கடந்திருந்தது. இதனால் ஆட்டம் சூடுபிடித்த நிலையில் வெற்றி யாருக்கு என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியது. கடைசியாக 6 பாலுக்கு 17 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், உம்ரான் மாலிக் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் எதுவும் கிடைக்கவில்லை. இரண்டாவது பந்து நோ பாலாகியது. இதனையடுத்து 5 பாலுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு பந்துகளும் பவுண்டரி அடிக்கப்பட்ட நிலையில், 4வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசியாக 2 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு பந்துகளிலும் ஒரு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது.