ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

 
indvspak

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் வெளியேறின. முதல் நான்கு இடங்களை பிடித்தா பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதிய நிலையில், அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நேற்று இரண்டாவது சூப்பர் 4 சுற்று போட்டி நடைபெற்ற நிலையில், அதில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

IND

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்று பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே லீக் போட்டியில் இரண்டு அணிகளும் மோதிய நிலையில், அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று மீண்டும் இரண்டு அணிகளும் மோதவுள்ளதால் அரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.