இன்று நடக்கிறது இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி

 
IND

இன்று இரவு மொஹாலி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெறவுள்ளது. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை அடுத்து இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.  தென் ஆப்ரிக்காவில் மொத்த மூன்று தொடரில் இந்திய அணி விளையாடியது. அதில் டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அந்த தொடரும் சமனில் முடிந்தது. தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்திய அணி தற்போது தாயகம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரில் மோதவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே மொத்தம் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.  டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த தொடருக்கு தயாராக இந்த தொடர் உதவும் எனபதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.