தென் ஆப்ரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - இன்று 3வது டி20 போட்டி

 
india

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  முதல் டி20 போட்டி கடந்த 08ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  2வது டி20 போட்டி நேற்று தென் ஆப்ரிக்காவின் கெப்ரா பகுதியில் உள்ள எஸ்.டி. ஜார்ஜ் பார்க் மைதானத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1க்கு1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.