வெற்றிப் பயணத்தை தொடருமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் ஆடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் சதம் விளாசினார். ச இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி தொடக்கம் முதலே சொதப்பியது. அந்த அணி 17.5 ஓவர்களுக்கு 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. தென் ஆப்ரிக்காவின் கெப்ரா பகுதியில் உள்ள எஸ்.டி. ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று வெற்றி பயணத்தை தொடர முனைப்பு காட்டும். இதேபோல் முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்க அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


