இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - மேற்கிந்திய தீவுகள் அணி திணறல்

 
Ind

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 57 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதேபோல் ரோகித் சர்மா 80 ரன்களில் வெளியேற, அடுத்த வந்த ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

ind


 
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்தார். விராட் கோலிக்கு இது 500வது சர்வதேச போட்டி ஆகும். இந்த நிலையில், 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ரன் அவுட்டானார். ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த இஷான் கிஷான் 25 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. 
  
இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  கிர்க் மெக்கென்சி 32 ரன்னில் முகேஷ் குமார் பந்து வீச்சில் அவுட்டானார். பிராத்வெய்ட் 75 ரன்னில் அவுட்டான நிலையில், பிளாக்வுட் 20 ரன்களும், டி சில்வா 10 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் நேற்று குறைந்த ஓவர்களே வீசப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்ட 3-ஆம் நாள் ஆட்டம் நேர முடிவில் 108 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. அலிக் அதானேஷ் 37 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.