ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!

 
toss

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது.

india squad

இந்திய அணி : சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா(துணை கேப்டன்), அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), சீன் அபோட், ஆடம் ஜாம்பா உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.